ஒன்ட்டேரியோவில் 4,00,000 க்கும் மேற்பட்ட சுகாதார தொழில் தகைமையாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், செவிலியர், மனித உடலியக்கவியல் வல்லுனர்கள், மஸ்ஸாஜ் சிகிச்சையளிப்பவர்கள் இன்னும் பலரும் அடங்குவார்கள். ஒன்ட்டேரியோவின் சுகாதாரத்தை ஒழுங்குபடுத்தும் 26 கல்லூரிகளாகிய நாங்களே இவர்களை மேற்பார்வையிடுகிறோம். எங்களைக் கல்லூரிகள் என அழைத்தாலும் நாங்கள் பள்ளிகளோ அல்லது சுகாதார தொழில்தகமையாளர்களுக்கு பிரதிதித்துவம் செய்யும் நிறுவன அமைப்புகளோ கிடையாது. ஒன்ட்டேரியோவின் சுகாதாரத்தை ஒழுங்குபடுத்தும் நாங்கள்:
- ஒன்ட்டேரியோவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுகாதார தொழில் தகைமையாளர்களாக ஆவதற்கான தேவைப்பாடுகளை அமைக்கிறோம். தகுதி வாய்ந்த சுகாதார தொழில் தகைமையாளர்கள் மட்டுமே தொழில் செய்வதற்கு பதிவு செய்யப்படுகிறார்கள்.
- தொழில் செய்வதற்கான இயல்தரங்கள் மற்றும் விதிமுறைகளை அமைத்து அமலாக்குகிறோம்; அதனால் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தகுதி வாய்ந்த சுகாதார தொழில் தகைமையாளர்களிடமருந்து, பாதுகாப்பான நெறிமுறை கொண்ட தகுதி பெற்றவர்களின் பராமரிப்பு/சேவையைப் பெறுகிறீர்கள்.
- சுகாதார தொழில் தகைமையாளர்கள் தங்களின் அறிவாற்றல் மற்றும் திறன்களை புதுப்பித்துக் கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களில் அவர்களைப் பங்கேற்கச் செய்கிறோம்..
- பதிவு செய்து தொழில் செய்பவர்கள் பற்றிய பெயர்ப் பட்டியலை ஆன்லைனில் வழங்குகிறோம், அதனால் ஒரு தொழில் தகைமையாளரின் தகுதிநிலையை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்..
- நாங்கல் ஒழுங்குபடுத்தும் தொழில் தகைமையாளர்கள் பற்றிய புகார்களைப் பெற்று புலனாய்வு செய்கிறோம்.
ஒன்ட்டேரியோவின் 26 சுகாதார ஒழுங்கமைப்பாளர்கள் அடங்கிய வலைத்தள பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொருவரைப் பற்றிய விவரமான நம்பகமான தகவல்கலை நீங்கள் பெறலாம். (கீழிருக்கும் லின்க்-குகளைக் க்ளிக் செய்தால், அவை உங்களை இன்னொரு வலைத்தளத்திற்கு கொண்டு செல்லும்.)
ஒன்ட்டேரியோவின் அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட சுகாதார தொழில் தகைமையாளர்களும் உங்களுக்கு உதவுவதற்கென்றே இருக்கிறார்கள். இந்த வலைப்பக்கம் பல மொழிகளில் இருந்தாலும் சில கல்லூரிகள் அனைத்து மொழிகளிலும் சேவை வழங்க இயலாமல் போகலாம். கல்லூரிகளின் அவரவர் மொழிபெயர்ப்புக்கான கொள்கை பற்றி மேலும் அறிய தனித்தனி கல்லூரியை தொடர்பு கொள்ளவும்.
- அக்யூபக்ச்சர் நிபுணர்
- கேட்கும் திறனுக்கான நிபுணர்
- பாதம் மற்றும் கணுக்கால் மருத்துவ நிபுணர்
- நரம்பு மற்றும் எலும்பு நிபுணர்
- பல் சுகாதார நிபுணர்கள்
- பல் மருத்துவ தொழில்நுட்ப நிபுணர்கள்
- பல் மருத்துவர்கள்
- பல் கட்டுமான நிபுணர்கள்
- உணவுமுறை நிபுணர்கள்
- ஹோமியோபதி மருத்துவர்கள்
- மனைத உடலியக்கவியல் நிபுணர்கள்
- மசாஜ் சிகிச்சை நிபுணர்கள்
- மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்ப வல்லுனர்கள்
- மருத்துவக் கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள்
- தாதியர்
- இயற்கைமுறை மருத்துவர்கள்
- செவிலியர்கள்
- தொழில்சார் சிகிச்சையாளர்கள்
- கண் மருத்துவர்கள்
- கண்பார்வைக் கருவி நிபுணர்கள்
- மருந்தாளுனர்கள் மற்றும் மருந்துக்கடை தொழில் நுணுக்க பணியாட்கள்
- உடற்பயிற்சி வல்லுனர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள்
- உடற்பயிற்சி சிகிச்சையாளர்கள்
- உளவியலாளர்கள் மற்றும் உளவியல்ரீதியான கூட்டுப்பணியாட்கள்
- உளவியல் சிகிச்சை நிபுணர்
- சுவாசித்தல் சிகிச்சை நிபுணர்கள்
- பேச்சு-மொழிமுறை மருத்துவர்கள்
- பாரம்பரிய சீன மருத்துவ தொழில் நிபுணர்கள்