இந்தப் பொதுப் பதிவேடுகள் நம்பத்தகுந்தவை மற்றும் நாளது வரையிலும் புதுப்பிக்கப்பட்டவை ஆகும்.

ஒன்ராறியோவில் பணிபுரிவதற்குப் பதிவுசெய்துகொண்டிருக்கும் எந்த ஒருவரும் பாதுகாப்பான, தகுந்த திறமையுடனான மற்றும் நன்னெறியான பராமரிப்பை அளிப்பதற்கான அவர்களது கல்லூரியின் தரநிலைகளைப் பூர்த்தி செய்திருக்கிறார். ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில் நிபுணர் ஒருவர் தொழில் நெறி தவறிய நடத்தைக்காக எப்போதாவது ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறாரா என்று இந்தப் பதிவேடுகள் உங்களுக்குக் கூறும்.

பதிவேடுகள் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படலாம்

ஒன்ராறியோ ஆரோக்கிய ஒழுங்குமுறைப்படுத்துநர்கள் அவர்களது பொதுப் பதிவேடுகளுக்கு வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, நீங்கள் பின்வருபவற்றைக் காணமுடியக்கூடும்: ஒரு தொழில் நிபுணரைக் கண்டறிதல், மருத்துவரைத் தேடுதல், உறுப்பினரைத் தேடுதல், பதிவகத்தின் அல்லது உறுப்பினரின் விவரக்குறிப்பு.

பின்வருபவற்றைக் கண்டறிவதற்குப் பதிவேட்டைப் பயன்படுத்துங்கள்:

  • உங்கள் ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில் நிபுணர் ஆரோக்கியத் தொழிலுக்கான கல்லூரியில் பதிவுசெய்துகொண்டிருக்கிறாரா என்பது
  • அவர்கள் எங்கே பணிபுரிகிறார்கள் என்பது
  • அவர்களது தொடர்புத் தகவல்கள்
  • அவர்கள் பேசும் மொழிகள்
  • அவர்களது தொழில் நெறிச் சான்றிதழ்கள்
  • ஏதேனும் ஒழுங்குபடுத்தப்படுதல் வரலாறு

உங்கள் ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில் நிபுணருக்கான பதிவேட்டைக் கண்டறிவதற்கு கீழே உள்ள தொழில் சுட்டியை கிளிக் செய்யுங்கள்:

(கீழே உள்ள சுட்டிகளை கிளிக் செய்வது உங்கள் மொழியில் கிடைக்கப்பெறாமல் இருக்கக்கூடிய, வேறொரு இணையத்தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.)