நோக்கம்

ஒன்ராறியோவின் 26 ஆரோக்கிய ஒழுங்குமுறைப்படுத்துநர்கள் மூலமான ஒழுங்குமுறைப்படுத்தலின் ஆதாயங்களை மேம்படுத்துவதும், நோயாளிகளைப் பாதுகாப்பதற்கு நடைமுறையில் இருக்கும் இயங்குமுறை அமைப்புகளைச் சிறப்பித்துக் கூறுவதும், ஒழுங்குமுறை ஆரோக்கியம் தொடர்பான கல்லூரிகளுடனும், அவை ஒழுங்குமுறைப்படுத்தும் ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில் நிபுணர்களுடனும், ஒன்ராறியோவில் உள்ளவர்களை இணைப்பதும் இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமாகும்.

இணையத்தில்

ஒரு குக்கி என்பது ஒரு வருகையாளரின் கணினியில் ஓர் இணையத்தளம் சேமிக்கும் தகவல்களின் ஓர் இழை ஆகும்; அந்த வருகையாளர் ஒவ்வொருமுறை திரும்ப வரும்போதும் வருகையாளரின் உலாவி அந்த இணையத்தளத்துக்கு இந்தத் தகவல்களை அளிக்கும். நாங்கள் வருகையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை, அவர்களின் இணையத்தளப் பயன்பாட்டை, அவர்களின் முன்னுரிமை விருப்பத்துக்குரிய மொழி உள்ளிட்ட அவர்களின் இணையத்தள அணுகல் முன்னுரிமை விருப்பங்களிளைத் தடமறிவதற்கு உதவுவதற்காக இந்த இணையத்தளம் குக்கிகளைப் பயன்படுத்துகிறது. தங்கள் கணினிகளில் குக்கிகள் வைக்கப்படுவதை விரும்பாத இந்த இணையத்தளத்தின் வருகையாளர்கள் இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு குக்கிகளை மறுக்கும் வகையில் உலாவியை அமைத்துக்கொள்ள வேண்டும்; இணையத்தளத்தின் சில அம்சங்கள் குக்கிகளின் உதவியில்லாமல் முறையாகச் செயல்படாமல் போகக்கூடிய குறைபாடு இதனால் ஏற்படும்.

கடப்பாடுகளுக்கான வரைமுறைப்படுத்தல்

ஒன்ராறியோவின் ஆரோக்கிய ஒழுங்குமுறைக் கல்லூரிகளின் கூட்டமைப்பின் (FHRCO) வாயிலாக ஒன்ராறியோவின் ஆரோக்கிய ஒழுங்குமுறைப்படுத்துநர்களின் மூலமாக ஒரு பொதுச் சேவையாக இந்தத் தகவல்கள் அளிக்கப்படுகின்றன. இந்த இணையத்தளமும், இதில் அடங்கியுள்ள அனைத்துத் தகவல்களும், வெளிப்படையான அல்லது உட்கிடையான எந்த வகையான பொறுப்புறுதியும் இல்லாமல் “உள்ளது உள்ளபடி” அளிக்கப்படுகின்றன. இந்த இணையத்தளத்தின் அல்லது இந்தத் தளமானது இணைக்கப்பட்டிருக்கும் வேறு ஏதேனும் இணையத்தளத்தின் எந்தப் பயன்பாட்டின் அடிப்படையிலுமான நேரடியான, மறைமுகமான, சிறப்பான, நிகழ்வுரீதியான, தொடரும் நிகழ்வான, அல்லது பிற சேதங்களுக்கு எந்தத் தனிநபருக்கும் அல்லது வணிக அமைப்புக்கும் ஒன்ராறியோவின் ஆரோக்கிய ஒழுங்குமுறைக் கல்லூரிகளின் கூட்டமைப்பு எந்தச் சூழ்நிலைகளிலும் கடப்பாடு உடையதாக இருக்காது.

தகவல்களின் துல்லியத்தன்மையைப் பற்றி

இந்த இணையத்தளத்தில் துல்லியமான தகவல்களைச் சேர்ப்பதற்கு நாங்கள் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொண்டிருக்கிறோம். தகவல்களுக்கான உங்கள் அணுகல் அல்லது இந்த இணையத்தளத்தில் உள்ள தகவல்களை உங்களால் அணுக முடியாமல் இருத்தல் காரணமாக ஏற்படும் எந்தச் சேதங்கள் அல்லது பாதிப்புக்கும் FHRCO பொறுப்பாகாது மற்றும் கடப்பாடு உடையதாக இருக்காது.

பதிப்புரிமை வரைமுறைப்படுத்தல்கள்

இந்த இணையத்தளம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கானது. இருப்பினும், நீங்கள் இந்த உள்ளடக்கத்தை உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக அல்லது வணிகரீதியானவை-அல்லாத நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தலாம். உள்ளடக்கத்தில் எதையும் மாற்றம் செய்வதற்கு அனுமதியில்லை.

பிற இணையத்தளங்களுடன் இணைப்பது

அனைத்து 26 ஒன்ராறியோ ஒழுங்குமுறைக் கல்லூரிகளின் இணையத்தளங்களுக்கும் இந்த இணையத்தளம் அணுகலை அளிக்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும் அதற்கே உரிய ஆன்லைன் அந்தரங்கம் தொடர்பான கொள்கை உள்ளது. Ontariohealthregulators.ca இணையப் பக்கங்களில் உள்ள சுட்டிகளின் வழியாக நீங்கள் பிற தளங்களை அணுகினால் Ontariohealthregulators.ca இணையத்தளத்தின் அந்தரங்கம் தொடர்பான கொள்கை பிற தளங்களுக்குப் பொருந்தாது என்பதை தயவுசெய்து அறிந்திருங்கள். Ontariohealthregulators.ca -இல் இருந்து நீங்கள் இணைக்கப்படுவதற்குத் தேர்வுசெய்யும் இணையத்தளங்களின் அந்தரங்கம் தொடர்பான வாசகங்களை, அந்த இணையத்தளங்கள் உங்கள் தகவல்களை எவ்வாறு சேகரிக்கின்றன, பயன்படுத்துகின்றன மற்றும் பகிர்ந்துகொள்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடிவதற்கு ஏதுவாக, தயவுசெய்து மீளாய்வு செய்யுங்கள். Ontariohealthregulators.ca இணையத்தளத்துக்கு வெளியே உள்ள இணையத்தளங்களில் உள்ள அந்தரங்கம் தொடர்பான வாசகங்களுக்கோ, எந்த உள்ளடக்கத்துக்குமோ FHRCO பொறுப்பாகாது.

அந்தரங்கம் தொடர்பான அலுவலர்

ஒன்ராறியோவின் ஆரோக்கிய ஒழுங்குமுறைக் கல்லூரிகளின் கூட்டமைப்பின் சார்பாக உருவாக்கப்பட்டிருக்கும் Ontariohealthregulators.ca இணையத்தளத்துக்கு அந்தரங்கம் தொடர்பான அலுவலர் ஒருவர் உள்ளார்; எவையேனும் கவலைகள், தெளிவுபடுத்தல்கள் அல்லது அந்தரங்கம் தொடர்பான கொள்கையின் சாத்தியமான தவறான பயன்பாடு குறித்தும் அவரைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் தகவல் தெரிவிப்புகளை தயவுசெய்து இங்கு அனுப்புங்கள்:

அந்தரங்கம் தொடர்பான தலைமை அலுவலர்
ஒன்ராறியோவின் ஆரோக்கிய ஒழுங்குமுறைக் கல்லூரிகளின் கூட்டமைப்பு
Suite 301 – 396 Osborne St, PO Box 244
Beaverton ON L0K 1A0
உள்ளூர்: (416) 493-4076
தொலைநகல்: (866) 814-6456
மின்னஞ்சல்: info@regulatedhealthprofessions.on.ca