பொதுமக்களைப் பாதுகாப்பது எங்கள் கடமையாகும்.

  • ஒன்ராறியோவில் ஒரு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஆரோக்கியத் தொழில் நிபுணராக ஆவதற்கான தேவைப்பாடுகளை நாங்கள் நிர்ணயிக்கிறோம். தகுதிபெற்ற ஆரோக்கியத் தொழில் நிபுணர்கள் மட்டுமே பணிபுரிவதற்காகப் பதிவுசெய்யப்படுகிறார்கள்.
  • தகுதிபெற்ற ஆரோக்கியத் தொழில் நிபுணர்களிடம் இருந்து பாதுகாப்பான, நன்னெறியான மற்றும் தகுந்த திறமையுடனான ஆரோக்கியப் பராமரிப்பை நீங்களும், உங்கள் குடும்பமும் பெற முடிவதற்கு ஏதுவாக, பணிபுரிவதற்கான தரநிலைகளை நாங்கள் நிர்ணயித்து, நடைமுறைப்படுத்துகிறோம்.
  • பதிவுபெற்றிருக்கும் ஆரோக்கியத் தொழில் நிபுணர்கள் அவர்கள் தொழில் செய்யும் காலம் முழுவதும் பாதுகாப்பான, நன்னெறியான மற்றும் தகுந்த திறமையுடனான ஆரோக்கியப் பராமரிப்பை வழங்கும் வகையில் அவர்களின் அறிவு மற்றும் திறன்களை நாளது வரையிலும் புதுப்பித்து வைத்துக்கொள்வதற்கு ஏதுவாக, தரநிலைக் காப்புறுதித் திட்ட நிகழ்ச்சிகள் எங்களிடம் உள்ளன.
  • உங்கள் ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில் நிபுணர் பணிபுரிவதற்கான தகுதியைப் பெற்றுள்ளாரா என்று நீங்கள் சரிபாரத்துக்கொள்வதற்கு ஏதுவாக நாங்கள் பொதுப் பதிவேடுகளை வழங்குகிறோம்.
  • உங்கள் ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில் நிபுணரைப் பற்றிய ஒரு கவலை மற்றும் புகார் உங்களுக்கு இருந்தால் உங்களுக்கு உதவி செய்வதற்கு நாங்கள் இங்கே இருக்கிறோம்.

 

ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் பின்வரும் சேவைகளை நீங்கள் இந்த இணையத்தளத்தில் இருந்து அணுக முடியும்:

அனைத்து 26 ஒன்ராறியோ ஆரோக்கிய ஒழுங்குமுறைப்படுத்துநர்களுக்குமான ஒரு பட்டியல் கீழே உள்ளது. அங்கே, ஒவ்வொன்றைப் பற்றியும் மேலும் விரிவான மற்றும் நம்பத்தகுந்த தகவல்களை நீங்கள் பெற முடியும்.

(கீழே உள்ள சுட்டிகளை கிளிக் செய்வது உங்கள் மொழியில் கிடைக்கப்பெறாமல் இருக்கக்கூடிய, வேறொரு இணையத்தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.)