ஒன்ராறியோவில் உள்ள ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில் நிபுணர் ஒருவரை நீங்கள் காணும்போது, கீழே உள்ளவாறு நீங்கள் எதிர்பார்ப்பதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது:

 • ஒவ்வொரு ஆரோக்கியப் பராமரிப்பு ஒழுங்குமுறைப்படுத்துநரின் இணையத்தளத்திலும் கிடைக்கப்பெறுகிற ஆன்லைன் பதிவேட்டைப் பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில் நிபுணரின் நாளது வரையிலும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை நீங்கள் கண்டறிய முடியும்.
 • உத்தேசிக்கப்பட்டிருக்கும் எந்தச் சிகிச்சை அல்லது நடைமுறையைப் பற்றியும் உங்கள் ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில் நிபுணர் தெளிவாக விளக்குவார்.
 • சேவைகளுக்கான கட்டணங்கள் அல்லது விலைகளை உங்கள் ஆரோக்கியப் பராமரிப்புத் தொழில் நிபுணர் தெளிவாகக் குறிப்பிடுவார்..
 • எந்தச் சிகிச்சை அல்லது நடைமுறையையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம்.
 • நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம் மற்றும் கவலைகளை வெளிப்படுத்தலாம்.
 • உங்கள் ஆரோக்கியப் பராமரிப்பைப் பற்றிய முடிவுகளை மேற்கொள்வதில் நீங்கள் ஒரு கூட்டாளியாக நடத்தப்படுவீர்கள்.
 • உங்கள் நிலைமைக்கான சரியான சிகிச்சை உங்களுக்கு அளிக்கப்படும்.
 • உங்களுக்கான சிகிச்சை பாதுகாப்பாக அளிக்கப்படும்.
 • மரியாதையுடனும், புரிந்துணர்வுடனும் நீங்கள் நடத்தப்படுவீர்கள்.
 • உங்கள் ஆரோக்கியம் மாற்றமடைந்தால் அல்லது மோசமானால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியத் தகவல்கள் உங்களிடம் இருக்க வேண்டும்.
 • உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இரகசியமாக இருக்கும்.
 • ஒரு கவலையைப் பற்றிப் பேச அல்லது புகார் ஒன்றை அளிக்க ஒன்ராறியோ ஆரோக்கிய ஒழுங்குமுறைப்படுத்துநர் ஒருவரை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

ஒன்ராறியோ ஆரோக்கிய ஒழுங்குமுறைப்படுத்துநர்கள் உங்கள் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வதற்குக் கீழே உள்ள தொழில் சுட்டிகளை கிளிக் செய்யுங்கள்:

(கீழே உள்ள சுட்டிகளை கிளிக் செய்வது உங்கள் மொழியில் கிடைக்கப்பெறாமல் இருக்கக்கூடிய, வேறொரு இணையத்தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும்.)